உலக சாதனைக்கும், வீரதீர செயல்களுக்கும் வயதோ, தோற்றமோ தடையல்ல! 77 வயது பிரித்தானிய பெண்மணி !

Report

பிரித்தானியாவைச்சேர்ந்த ஜீன் சோக்ரடீஸ் (Jeanne Socrates) எனும் 77 வயது பெண்மணி தன்னந்தனியாக, இடையில் எங்கும் தங்காமல், யாருடைய உதவியும் இன்றி உலகத்தை சுற்றிவந்த படகோட்டி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த வருடம் ஒக்ரோபர் 3 ஆம் திகதியில் இருந்து இந்த மாதம் 7 வரையான 330 நாள்களைத் தனியே கடலில் கழித்த அவர் கனடாவின் விக்டோரியா துறைமுகத்தைச் சென்றடைந்தார்.

அங்கு தனது வெற்றிப்பயணம் பல சவால்கள் நிறைந்ததாக இருந்தாக ஜீன் தெரிவித்துள்ளார்.

படகின் ரேடார் தொடர்புக் கருவி, திரைச்சீலை போன்றவை சேதமடைந்துள்ள நிலையில் பயணத்தின் இடையில் எதிர்கொண்ட சூறாவளியின் போது படகில் பொருத்தப்பட்டிருந்த சூரிய சக்தித் தகடுகள் கடலில் விழுந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எனினும், தடைகளைத் தாண்டி சாதனை படைத்த அந்தப் பெண்மணி, தனது பயணத்தை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் நிறைவுசெய்ததாக கூறியுள்ளார்.

இதேவேளை உலக சாதனைக்கும், வீரதீர செயல்களுக்கும் வயதோ, தோற்றமோ தடையல்ல என்பதை 77 வயதான ஜீன் சோக்ரடீஸ் நிரூபித்துள்ளார்.

359 total views