பிரித்தானிய கிராமம் ஒன்றின் சாலையில் கட்டுக்கட்டாக பணம் கிடக்க, அதைக் கண்டெடுத்தவர்களோ, அதிலிருந்து ஒரு நோட்டைக்கூட எடுக்காமல் பத்திரமாக பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.
பிரித்தானியாவிலுள்ள Blackhall Colliery என்னும் கிராமத்தின் சாலைகளில் யாரோ ஒரு மர்ம நபர் கட்டுக்கட்டாக பணத்தை போட்டுச் சென்றிருந்தார். மக்கள் இத்தகைய 12 கட்டுகளை கண்டெடுத்திருந்தார்கள்.
ஆனால், அத்தனை பணத்தையும் அப்படியே கொண்டு பொலிசாரிடம் ஒப்படைத்துவிட்டார்கள் அவர்கள்.
இதில் ஒரு முக்கியமான விடயம் உள்ளது, அது என்னவென்றால், இந்த கிராமத்தின் தெருக்களில் இப்படி பணம் கிடைப்பது இது புதிய விடயமல்ல. அதாவது 2014 முதல் இப்படி நடந்து வருகிறது.
யாரோ ஒரு நல் மனம்கொண்ட புண்ணியவான் இப்படி போடுவதாக மக்கள் பேசிக்கொண்டாலும், ஒருமுறை கூட அதை யாரும் எடுத்து பயன்படுத்தியதில்லை.
இதனால் பிரித்தானியாவிலேயே இதுதான் நேர்மையான கிராமமோ என மக்கள் வியந்து நோக்கும் புகழும் இந்த கிராமத்திற்கு கிடைத்துள்ளது.
குறிப்பாக 20 பவுண்டு நோட்டுகள் கொண்ட கட்டுகள், மொத்தம் 2,000 பவுண்டுகள், எல்லோர் கண்ணிலும் படும் விதமாக இந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களும் கொஞ்சமும் சறுக்காமல் பணத்தை தொடர்ந்து பொலிசாரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.