பிரிட்டிஸ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்

Report

பிரிட்டிக்ஷ் பிரதம மந்திரி பொரிஸ் ஜோன்சன் லண்டனின் செயின்ட் தொமஸ் மருத்துவமனையில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அங்கு அவருக்கு ஒக்ஸிஜன் (oxygen) சிகிச்சை அளிக்கப்பட்டு வென்டிலேட்டரில் (ventilator) வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை சுகாதார செயலாளர் மாற் ஹான்கொக் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி (Health Secretary Matt Hancock and Chief Medical Officer Chris Whitty) இருவரும் கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

எனினும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் சிலருக்கு கொரோனோ தொற்று அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் தீவிர சிகிச்சையில் இருக்கும்போது பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களுக்கு யார் பொறுப்பு என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அந்த தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2566 total views