பிரித்தானிய பிரதமர் உடல்நிலை குறித்து கேபினட் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Report

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல் நிலை குறித்து பேசிய கேபினட் அமைச்சரான Michael Gove, பிரதமரை தீவிர சிகிச்சைப்பிரிவில் பார்ப்பது பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும், அனைவரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

போரிஸ் ஜான்சனின் உடல் நிலை சற்று மோசமடைந்ததைத் தொடர்ந்து லண்டன் St Thomas' மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.

அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தவேண்டிய நிலை வருமோ என்றும் மருத்துவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது.

சுவாசகோளாறு காரணமாக போரிஸ் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பொறுப்புக்கள் வெளியுறவுச் செயலர் Dominic Raab வசம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து பேசிய கேபினட் அமைச்சரான Michael Gove, அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், சமீபத்திய தகவல் ஒன்று, அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்படவில்லை என்று தெரிவிக்கிறது.

மேலும், போரிஸ் ஜான்சனின் உடல் நிலை குறித்த விவரங்கள் தொடர்ந்து மகாராணியாருக்கு தெரிவிக்கப்பட்டு வருவதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

1977 total views