போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் நலமாக இருப்பதாகத் தகவல்

Report

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு உயிர் வாயு வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் வெண்டிலேட்டர் வைக்கும் அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமரின் செய்தித் தொடர்பாளர், மருத்துவமனையில் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

அத்துடன் நிம்மோனியா அறிகுறிகள் ஏதும் அவருக்கு இல்லை என குறிப்பிட்ட அவர், போரிஸ் ஜான்சனுக்கு உயிர் வாயு வழங்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் வைக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2941 total views