லண்டனில் பள்ளி மாணவிக்கு நீதி கோரி திரண்ட ஆயிரக்கணக்கானோர்: வெளியான முழு தகவல்

Report

கடந்த ஆண்டு நீரில் மூழ்கி மரணமடைந்த ஒரு சோமாலிய பள்ளி மாணவிக்கு நீதி கோரி கருப்பின ஆதரவு போராட்டக் குழுவினர் இன்று லண்டனில் பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

லாங்க்ஸில் உள்ள இர்வெல் ஆற்றில் குதித்து கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் திகதி 12 வயதேயான சிறுமி சுக்ரி அப்தி தற்கொலை செய்து கொண்டார்.

இனவாத ரீதியாக தமது மகள் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கான காரணத்தாலையே, அவர் தற்கொலை செய்து கொண்டதாக சுக்ரியின் தாயார் அப்போது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆனால் இதுவரை பொலிஸ் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற தகவல் கருப்பின ஆதரவு போரட்டக் குழுவினரை பேரணிக்கு தூண்டியுள்ளது.

சிறுமி சுக்ரி கருப்பின மாணவி என்பதாலையே, பிரித்தானிய பொலிசார் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதாக குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில், சிறுமி சுக்ரி அப்திக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இதனிடையே, மறைந்த முன்னாள் பிரதமர் சர்ச்சிலின் நினைவுச்சின்னத்தை பாதுகாக்க பொலிசார் குவிக்கப்பட்டனர்.

ஆனால் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அமைதியான முறையின் எந்த வன்முறைக்கும் இடம் தராமல் கடந்து சென்றுள்ளனர்.

பேரணியானது ஹைட் பூங்காவில் ஒன்று திரண்ட பின்னர் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள கல்வித் துறைக்கு அணிவகுத்துச் சென்றனர்.

சிறுமி சுக்ரி அப்தியின் மரணத்தைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று கடந்த ஆண்டு பொலிசார் தீர்ப்பளித்தனர்.

ஆனால் சுக்ரியிடம், நீச்சல் தெரியாது என்பது தொடர்பில் சக மாணவர்கள் கிண்டல் செய்ததாகவும் அதுவே அவரை ஆற்றில் குதிக்க தூண்டியது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

999 total views