பிரான்ஸ் உட்பட மூன்று நாடுகளில் கொரோனா பீதி இல்லை... பிரித்தானியர்கள் சென்று வரலாம்!

Report

கொரோனா பீதியின்றி பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் அடுத்த வாரம் முதல் பிரித்தானியர்கள் சென்று வரலாம் என வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரித்தானியா கடைபிடித்துவரும் தரத்திற்கு நிகராக கொரோனா சோதனைகளும் தொடர்புடைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஒப்புக்கொண்ட நாடுகளுடனையே இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக பிரித்தானிய போக்குவரத்து அமைச்சர் Grant Shapps வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஜூன் 29 அன்று ஊரடங்கு தொடர்பில் முன்னெடுக்கப்படவிருக்கும் மதிப்பாய்வில் பாதுகாப்பான பயண திட்டம் தொடர்பில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

மட்டுமின்றி தேவை இருந்தால் மட்டுமே சர்வதேச பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலில் இருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லலாம் என்ற அறிவுறுத்தல் வெளியாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலியுடன் மேலும் ஜேர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜிப்ரால்டர், பெர்முடா, மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் அனைத்தும் ‘பாதுகாப்பான நாடுகளின்’ முதல் தொகுப்பில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் மாதம் துருக்கி மற்றும் துபாய் செல்ல பிரித்தானியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

நெடுந்தொலைவு பயணங்களுக்கு, அதாவது வியட்நாம், சிங்கப்பூர் மற்றும் ஹொங்ஹொங் செல்ல கோடையின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை காத்திருக்க நேரும்.

ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள், மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதி வரை தடை நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.

3984 total views