ஸ்காட்லாந்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய அகதி இவன் தான்! வெளியான புகைப்படம்

Report

ஸ்காட்லாந்தில் ஹோட்டல் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் காயமடைந்த நிலையில், தாக்குதல்தாரியின் புகைப்படம் மற்றும் அவரைப் பற்றிய சில தகவல்களும் வெளியாகியுள்ளது.

ஸ்காட்லாந்தின் Glasgow நகரில் இருக்கும் பார்க் இன் ஹொட்டலில் இரண்டு தினங்களுக்கு மர்ம நபர் ஒருவர் திடீரென்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பொலிசார் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு அகதி தான் என்று கூறப்பட்டது.

ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களாக பார்க் இன் ஹொட்டல் புகலிடக் கோரிக்கையாளர்களின் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

அங்கு தங்கியிருந்த Badreddin Abadlla Adam என்ற நபர், ஹொட்டல் அறையில் உரத்த சத்தம் மற்றும் சூரிய ஒளி இல்லாததால் கோபமடைந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான் என்று செய்தி வெளியானது.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் Badreddin Abadlla Adam-ன் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக சம்பவ இடத்திலே Badreddin Abadlla Adam பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து தாக்குதல் நடத்துவதற்கு முன்பு Badreddin Abadlla Adam சித்தப்பிரமை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், Badreddin Abadlla Adam சித்தப்பிரமை நோயின் அறிகுறிகளைப் பெற்றார். அவர் ஹோட்டலில் இருக்கும் எல்லோரும் தன்னை வெறுப்பதாக அவர் நினைத்தார்.

குழந்தை முகம், அழகான முகம் கொண்டவர். அவர் முந்தைய நாள் கூட சிலரை குத்தப் போவதாக கூறினார். தனது அடுத்த அறையில் இரண்டு பேரைத் தாக்கப் போவதாக அவர் கூறினார்.

ஏனென்றால் Badreddin Abadlla Adam-ஐ அவர்கள் வேண்டும் என்றே தொந்தரவு செய்ய அவர்கள் சத்தம் போட்டு வந்ததால், இந்த முடிவை அவர் எடுத்தாக கூறியுள்ளார்.

சூடானில் இருந்து அகதியாக வந்த இவர், சுமார் ஆறு மாதங்கள் இங்கிலாந்தில், இருந்ததாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

1192 total views