பிரித்தானியாவின் உணவு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய ஊழியர்கள் 300 பேரை தேடும் பணி தீவிரம்!

Report

பிரித்தானியாவின் வேல்சில் உணவு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய ஊழியர்கள் 300 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Rowan Foods என்ற உணவு தொழிற்சாலை ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டார்.

இதனையடுத்து அங்கு பணியாற்றிய 300 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களை தேடும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வேல்சின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், Rowan Foods தொழிற்சாலையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

எனினும் Betsi Cadwaladr University Health Board-வுடன் இணைந்து கொண்டு பரிசோதனைக்கு வராத 300 பேரை தேடி வருகிறோம்.

நிறுவனத்தின் முதலாளி மற்றும் அங்குள்ள சூழலை ஆராய்ந்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி அறிகுறிகளற்ற கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களையும் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பிரித்தானியாவில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், இங்கிலாந்தில் 18 பேரும், வேல்சில் இருவரும், வடக்கு அயர்லாந்தில் ஒருவரும் இதில் அடக்கம்.

1830 total views