பிரித்தானியாவில் அக்கம் பக்கம் பார்க்காமல் சாலையில் ஓடிய சிறுமி... தூக்கி வீசிய கார்: அடுத்து நடந்த சம்பவம்!

Report

பிரித்தானியாவில் அக்கம் பக்கம் பார்க்காமல் சாலையை ஓடிக் கடக்க முயன்ற சிறுமி ஒருத்தி மீது கார் ஒன்று மோதி அவளை தூக்கி வீசும் காட்சி வெளியாகியுள்ளது.

Devon மற்றும் Cornwall பொலிசார் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

வெளியாகியுள்ள அந்த வீடியோவில் பரபரப்பாக கார்கள் சென்று கொண்டிருக்கும் சாலை ஒன்றை அக்கம் பார்க்காமல் ஓடிக் கடக்க முயல்கிறாள் ஒரு சிறுமி.

அப்போது, வேகமாக வந்த ஒரு கார் அவள்மீது மோத, சுமார் 20 மீற்றர் உயரத்திற்கு வீசியெறியப்படுகிறாள் அந்த சிறுமி.

காற்றில் சுழன்று அவள் விழுவதைக் கண்டு பின்னல் வந்துகொண்டிருந்த கார் பதறிப்போய் பிரேக் அடிக்கிறது.

ஆனால், சற்று தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்த சிறுமியோ எழுந்து ஓடுகிறாள். விசாரணையில், அதிசயிக்கத்தக்க விதமாக, அவளது உடலில் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவள் மீது காரை மோதிய சாரதி மீது தவறில்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள Devon மற்றும் Cornwall பொலிசார், ஆண்டொன்றிற்கு தங்கள் பகுதியில் 120 சிறுவர் சிறுமியர் இதுபோல் விபத்துக்குள்ளாவதாக தெரிவிக்கிறார்கள்.

அத்துடன், பிள்ளைகள் சாலையைக் கடக்கும் முன் இரண்டு பக்கமும் பார்த்து வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின் சாலையைக் கடக்க அவர்களுக்கு அறிவுறுத்துமாறு பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள் பொலிசார்.

6282 total views