22 கத்திக்குத்துகளுக்கு உள்ளான பெண்ணின் கடைசி வார்த்தைகள்... தலையையும் வெட்ட முயன்ற நபர் கைது!

Report
192Shares

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், தான் ஆறு மணி நேரத்துக்கு முன் சந்தித்த ஒரு நபருடன் போதைப்பொருள் எடுத்துக்கொண்டு பாலுறவு கொள்ள எடுத்த முடிவு, அவரது கோர முடிவுக்கே வழிவகுத்துவிட்ட சோகம் பிரித்தானியாவில் நடந்துள்ளது.

பிரித்தானியரான Sarah Hassall (38), ராணுவத்தில் மதிப்பிற்குரிய பணியில் இருந்தவர்.

14 ஆண்டுகள் விமானப்படையிலும், ராணுவத்திலும் மற்றவர்கள் மதிக்கும் உயர் பொறுப்பில் இருந்த Sarahவின் இரத்தத்தில் போதைப்பொருள் இருந்தது தெரியவந்ததையடுத்து, ராணுவத்திலிருந்து வெளியேறியதோடு கணவனிடமிருந்தும் பிரிந்து வாழ்ந்தார் அவர்.

Sarahவுக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நேற்று வரை பலரும் மதிக்கத்தக்க உயர் பதவியிலிருந்துவிட்டு, ஒரு சாதராண குடிமகளாக வாழும் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள இயலாததால், போதையின் பக்கம் திரும்பியிருக்கிறார் Sarah.

இந்நிலையில், மதுபான விடுதி ஒன்றில் Brian Manship (38) என்பவரை சந்தித்திருக்கிறார் Sarah.

மது அருந்தியபின், Brianஉடைய வீட்டுக்கு சென்று போதைப்பொருள் எடுத்துக்கொண்டு அவருடன் பாலுறவு கொள்ளவும் சம்மதித்து அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார் Sarah.

போன இடத்தில் போதையின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்த Brian, Sarah தன்னிடமிருந்து திருட முயன்றதாக கூறி அவரை தாக்கியிருக்கிறார்.

என்னை விடு, என்னை விடு என்று Sarah போட்ட சத்தத்தை பக்கத்து வீட்டிலிருக்கும் Philip Iveson என்பவர் கேட்டு எட்டிப்பார்த்திருக்கிறார்.

அப்போது, நான் வேண்டுமானால் மீண்டும் உன்னுடன் பாலுறவு வைத்துக்கொள்கிறேன், யாரிடமும் சொல்லமாட்டேன், என்னை விட்டுவிடு என Sarah கதறியழுததையும் கேட்டிருக்கிறார் Philip.

அத்துடன் ஜன்னல் அருகே பரிதாபமாக நின்று, ஜன்னல் கண்ணாடியை படபடவென தட்டி என்னைக் காப்பாற்றுங்கள் என கதறுவதையும் பார்த்திருக்கிறார் Philip.

பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டு, அவர்கள் வந்து பார்க்கும்போது, உடலில் 22 கத்திக்குத்துகள், ஏழு கீறல்களுடன் நிர்வாணமாக இறந்து கிடந்திருக்கிறார் Sarah.

அத்துடன் அவரது தலையை வெட்டி தனியாக எடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

Sarahவை கொடூரமாக கொன்று விட்டு ஜன்னல் வழியாக தப்பியோடியிருந்த Brianஐ, பத்தே மணி நேரத்தில் கைது செய்தார்கள் பொலிசார்.

குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறையில் இருக்கும் வகையில் Brianக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

6202 total views