இங்கிலாந்தில் கடற்கரைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!

Report

இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் அதிகபட்ச கோடை வெப்பம் காரணமாக ஏராளமான பொதுமக்கள் கடற்கரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

லண்டனில் நேற்று வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை தாண்டியது.

அதேபோல பிரைட்டன் நகரிலும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது.

இதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு பிறகு செப்டம்பர் மாதத்தில் மிக அதிக கோடை வெப்பத்தை இங்கிலாந்து எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இந்த வாரம் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

4787 total views