இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் வேலைவாய்ப்பினை இழந்த 156,000 இளைஞர்கள்!

Report

இங்கிலாந்தில் கடந்த 3 மாத காலப் பகுதியில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 156,000 உயர்வடைந்துள்ளது.

16 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு வேலைவாய்ப்பினை இழந்துள்ளதாக இங்கிலாந்தின் அண்மைய புள்ளி விபரத் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

மொத்தமாக இங்கிலாந்தின் வேலையின்மை விகிதமானது மேற்கண்ட காலக் கட்டத்தில் 4.1 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, இங்கிலாந்தின் வேலையின்மை விகிதம் இந்த காலகட்டத்தில் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது முன்பு 3.9 சதவீதமாக இருந்தது.

கொரோனா வைரஸ் முதல் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து சுமார் 695,000 இங்கிலாந்து தொழிலாளர்கள் பிரிட்டிஷ் நிறுவனங்களின் ஊதியத்திலிருந்து காணாமல் போயுள்ளனர்.

887 total views