கொரோனா ஊரடங்கால் பிரித்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்!

Report

பிரித்தானியாவில் மதுவால் சிக்கலை எதிர்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை கொரோனா ஊரடங்கால் இரட்டிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே மதுவால் சிக்கலில் உள்ள மக்களின் எண்ணிக்கை 8.4 மில்லியன் என அதிகரித்துள்ளது.

அதாவது பிரித்தானியர்களில் 5-ல் ஒருவர் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அதிக மது அருந்தியதாக தெரிய வந்துள்ளது.இதற்கு முக்கிய காரணமாக, கொரோனாவால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பொருளாதார சிக்கல் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, குடியிருப்பில் இருந்தே பணியாற்றும் பிரித்தானியர்களும் அச்சம் காரணமாக அதிக மது அருந்தும் சூழலுக்கு தள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நடுத்தர வர்க்க பிரித்தானியர்களில் 40 சதவீதம் பேர் தற்போது அதிகமாக மது அருந்தி வருகின்றனர், இது பிப்ரவரி மாதத்தில் 28 சதவீதமாக இருந்தது.

எட்டு புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற எவரும் அதிக ஆபத்துள்ள குடிகாரர்களாகக் கருதப்படுகின்றனர்.

ஐந்து புள்ளிகளைப் பெற்றவர்கள் 19 சதவீதத்தினர் எனவும் அதிக ஆபத்து கொண்ட பிரிவில், பிப்ரவரி மாதத்தில் 10.8 சதவீதமாக இருந்தனர் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் பிரித்தானியாவில் மதுவால் சிக்கலில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 8.4 மில்லியன் என தெரிய வந்துள்ளது.

2049 total views