விடுதலைபுலிகள் தொடர்பில் பிரித்தானியாவின் சிறப்பு நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு; உள்துறை அமைச்சு திண்டாட்டம்

Report

பிரித்தானியாவின் சிறப்பு நீதிமன்றம், புலிகள் மீது தடையை நீடித்த விடையம் தவறானது என சுட்டிக் காட்டி உள்துறை அமைச்சருக்கு தனது தீர்ப்பை அனுப்பியுள்ளது.

குறித்த அறிக்கை நேற்று திங்கள் அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை அடுத்து அது தொடர்பில் உள்துறை அமைச்சர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் ஏற்கனவே தனது கடும் அதிருப்த்தியை உள்துறை செயலருக்கு அனுப்பி விட்டார்.

ஆனால் அதனை வைத்து எதுவும் செய்ய முடியாது என்பது, பீரீத்தி பட்டேலுக்கு நன்றாக தெரியும். ஏதாவது புதுக் காரணத்தை காட்டி தடையை நீடிக்க வேண்டும். இல்லையென்றால் பாராளுமன்றில் சமர்பித்து தடையை எடுக்க வேண்டும்.

இது 2 வழிகள் தான் உள்ளது. கடந்த 18 மாதத்தில் புலிகள் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடு படவில்லை. இனி எந்த ஒரு புது ஆதாரங்களையும் கொடுக்கவும் முடியாது. எனவே பிரித்தானிய உள்துறை அமைச்சு தற்போது என்ன செய்வது என்பது தொடர்பாக திண்டாடி வருகிறது.

இது இவ்வாறு இருக்க, இந்திய அரசு புலிகள் விடையத்தில் எந்த அழுத்தத்தையும் பிரித்தானியாவுக்கு தெரிவிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று.

இலங்கை அரசு சீனாவுடன் இணைந்து பயணிப்பது தொடர்பாக இலங்கைக்கு ஒரு பாடம் புகட்ட மோடி அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், இந்த விடையத்தில் இந்தியா தலையிட விரும்பவில்லை என, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தமிழர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரவுள்ளதாக அவதானிகள் பலரும் கூறிவருகின்றனர்.

3834 total views