இங்கிலாந்தில் வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா; ஒரே நாளில் 529 பேர் பலி!

Report
152Shares

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 46,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 529 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5வது இடத்தில் உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ் நாட்டு மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, இங்கிலாந்து முழுவதும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 46,169 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,18,518 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இங்கிலாந்தில் ஒரே நாளில் 529 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 81,960 ஆக அதிகரித்துள்ளது.

6280 total views