பிரித்தானியாவை இயல்புக்கு கொண்டுவர 4 அம்ச திட்டத்தை கையிலெடுத்த போரிஸ் ஜான்சன்!

Report
0Shares

தேசிய ஊரடங்கில் இருந்து பிரித்தானியாவை படிப்படியாக சகஜ நிலைக்கு கொண்டு வரும் 4 அம்ச திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

பிரித்தானியாவில் தற்போது அமுலில் இருக்கும் தேச்சிய ஊரடங்கை நீக்கும் பொருட்டு, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் அழுத்தம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி கொரோனா தடுப்பூசி அளிக்கும் திட்டமும், துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 4 அம்ச திட்டமுடன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மிக விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் மாதம் தொடங்கி பிரித்தானியாவில் பாடசாலைகள் அனைத்தும் வழக்கமான செயல்பாட்டுக்கு திரும்பும் என்றே தெரிய வந்துள்ளது.

அத்துடன் மார்ச் 8ம் திகதி முதல் பூங்காக்களில் அல்லது தேநீர் விடுதிகளில் இருவர் ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டும்.

மார்ச் 29 முதல் இரண்டு குடும்பத்தை சேர்ந்த பல எண்ணிக்கையிலான மக்கள் ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், டென்னிஸ் அல்லது கூடைப்பந்து விளையாடும் வசதிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் ஏப்ரல் மாதத்தில் அத்தியாவசிய தேவையற்ற சில்லறை வணிகம் திறந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

மட்டுமின்றி பல்கலைக்கழகங்களும் கல்லூரி வளாகங்களும் திறந்து செயல்படலாம். மேலும்,

பப்கள், உணவகங்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளிப்புற பகுதிகளை பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் முடி திருத்தும் கடைகள் திறக்க வாய்ப்புள்ளது. மே மாத பகுதியில் மதுபான விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களை உள்ளே அமர்ந்து மது அருந்த அனுமதிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் ஜூன் மாதத்தில் இருந்து திருமணங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

இதேவேளை ஜூலை மாத இறுதிக்குள் பிரித்தானியாவில் மொத்த பெரியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

78 total views