கிம் ஜாங் உன் கெஞ்சியதால் தான் டிரம்ப் சம்மதித்தார்: டிரம்ப் வழக்கறிஞரின் பேச்சால் வெடித்த சர்ச்சை

Report
24Shares

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கெஞ்சி கேட்டதால் தான், ரத்து செய்த சந்திப்புக்கு டிரம்ப் மீண்டும் சம்மதித்தாக டிரம்ப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் வரும் 12ஆம் திகதி சந்தித்து பேச உள்ளனர். முன்னதாக, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக இந்த சந்திப்பை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்தார்.

அதன் பின்னர், இந்த சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், டிரம்ப்பின் வழக்கறிஞர் ரூடி கிலியானி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரூடி கிலியானி கூறுகையில், ‘வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கெஞ்சி கேட்டதால் தான், அவரை சந்திக்க டிரம்ப் மீண்டும் ஒப்புக் கொண்டார்’ என ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரூடி கிலியானி நியூயார்க் நகரின் முன்னாள் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

1365 total views