அமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபிளாரென்ஸ் புயல்: கடற்கரை பகுதியை காலி செய்த மக்கள்

Report
37Shares

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் ஃபிளாரென்ஸ் புயல், நாளை வடக்கு கரோலினா பகுதியை தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் வடக்கு, தெற்கு கரோலினா பகுதிகளை அதிபயங்கரமான ஃபிளாரென்ஸ் எனும் புயல் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றன.

இந்நிலையில், சுமார் 215 கிலோ மீற்றர் வேகத்தில் ஃபிளாரென்ஸ் புயலானது, நாளை வடக்கு கரோலினாவை ஒட்டியுள்ள கடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விர்ஜினியா மற்றும் கரோலினா மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், இந்த புயலின் தாக்கத்தினால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2094 total views