ட்ரம்ப் வசித்த குடியிருப்பில் நடந்த விபரீதம்

Report
48Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வசித்துவந்த மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியதாக, தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ட்ரம்ப்புக்குச் சொந்தமான ‘ட்ரம்ப் கோபுரம்’ எனும் 58 மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் நேற்று (திங்கட்கிழமை) திடீரெனத் தீப்பிடித்துள்ளது.

தீயணைப்புப் படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் தீயணைப்புப் படை வீரரொருவரும் அடங்குகின்றார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் குடிபெயர முன்னர், இந்த மாடிக் கட்டடத்தின் 5ஆவது மாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

2548 total views