அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

Report
34Shares

அமெரிக்காவில் இந்திய மாணவன் உணவு விடுதியில் பணியில் இருந்த போது அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சரத் கோப்பு (25). இவர் கடந்த ஜனவரி மாதம்தான் அமெரிக்காவின் மிசவ்ரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக் கழகத்தின் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். சரத் அங்குள்ள உணவு விடுதி ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உணவு விடுதியில் பணியில் இருந்த சரத் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டான்.

இதில் அவரின் முதுகில் குண்டு பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உணவு விடுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தின்போது சரத் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் சன்மானம் வழங்கப்படும் என கன்சாஸ் காவல்துறை அறிவித்துள்ளது. சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டது.

மற்றும் மாணவரின் குடும்பத்துக்கு வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இரங்கல் தெரிவித்தார்.

1194 total views