அமெரிக்காவில் கொடூரம்! மனைவியை சேர்த்து 5 பேரை சுட்டுக்கொன்ற கணவர்

Report

அமெரிக்காவில் நபர் ஒருவர் 5 பேரை சுட்டுக்கொன்று பின்னர் தானும் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைத்துள்ள பேக்கர்ஸ் பீல்டு என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த இந்த தம்பதியினர் இருவரும் சம்பவத்தன்று,ஒருவரிடம் வாகனம் விற்பது சம்பந்தமாக பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த நபர் திடீரென எதிர்பாராத விதமாக எதிரே இருந்த 2 பேரை சுட்டு கொன்றார். பின்னர், தன் மனைவியையும் கொன்று அதைப்பார்த்தவரையும் கொன்று மொத்தம் 5 பேரைக் கொன்று பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொலிஸார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றது புதுமையாக உள்ளதென்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

909 total views