அமெரிக்காவில் பயங்கர பாரிய வெடிப்பு! 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்பு

Report

அமெரிக்காவின் எரிவாயு குழாயின் கசிவினால் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மசச்சுசெட்ஸ் மாநிலத்தில் அமைத்துள்ள எரிவாயு குழாயில் திடீரென நேற்று மாலை சுமார் 5-மணியளவில் கசிவு ஏற்பட்டது.

இந்த கசிவு காரணமாக அப்பகுதிகளை சுற்றி அமைத்துள்ள மூன்று நகரங்களில் வீடு, வர்த்தக நிலையங்கள் உட்பட 40 கட்டிடங்களில் பாரிய வெடிப்புச் சம்பவங்கள் நிகழந்துள்ளன.

இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 10-க்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தகவலளறிந்து விரைந்து வந்த 70 - மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திடீரென நிகழ்ந்த இந்த வெடிப்பையடுத்து மசச்சுசெட்ஸ் மாநிலத்தை சுற்றி அமைத்துள்ள 3 நகரங்களிலுள்ள மக்கள் உடனடியாக தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

827 total views