நாய்கள் சிறுநீர் கழிக்க அதிபர் டிரம்ப் சிலைகள்:வைரல் செய்தி!

Report

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் சிலைகளின் முன்பு நாய்கள் சிறுநீர் கழிக்க ''பிஸ் ஆன் மி' என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வாசகமானது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் பகுதியில் உள்ள சாலையோரங்களில் புல் பகுதியில் உள்ள அதிபர் டிரம்பின் சிலைகளில் எழுதப்பட்டிருக்கிறது.

இங்கு வளர்க்கப்பட்ட புல் பகுதியில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு டிரம்பின் சிலை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளுடன் கூடவே ''பிஸ் ஆன் மி'' என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து சிலை வடிவமைப்பலரான பில் கேப்லே என்பவரிடம் கேட்கும் போது, அதிபர் டிரம்ப்பின் மீது உள்ள கோபத்தில் இவ்வாறு செய்ததாகவும், அவர் தனது கடமையை ஒழுங்காக செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 'பிஸ் ஆன் மி'' என்ற வாசகமானது குறிப்பாக நாய்களுக்காக வைக்கப்பட்டுள்ளதாம்.

1643 total views