அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஸ்சன்ஸ் பதவி நீக்கம்!

Report

அமெரிக்க அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவுடனான விவகாரங்களில் சட்டவாக்க அதிகாரிகளை தொடர்ச்சியாக விமர்த்துவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று (புதன்கிழமை) அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஸ்சன்ஸை பதவியை விட்டு நீக்கியுள்ளார்.

இதையடுத்து, தற்போது செஸ்சன்ஸின் பதவி வெற்றிடத்திற்கு அவருடைய சிரேஸ்ட அலுவலகர்களில் ஒருவரான மெதிவ் வைடேகர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமையன்று டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸின் சேவைக்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். அவரது எதிர்காலத்துக்கும் எங்களின் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெஃப் செஸ்சன்ஸின் இராஜினாமா கடிதத்தில், பதவி விலகுவதற்கான தீர்மானம் தனது சுய தனிப்பட்ட முடிவு அல்ல என்றும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப நான்

எனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்கிறேன்' என்று சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

352 total views