கலிபோர்னியா மதுபான விடுதியில் திடீர் துப்பாக்கி சூடு;12-பேர் பலி!

Report

கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர்கள் சிலர் திடீரென நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12- பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதலானது, தெற்கு கலிபோர்னியாவில் தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு நடந்துள்ளது.

சம்பவத்தன்று, மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதில் பாருக்குள் இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் சுமார்30 ரவுண்டுகள் கடுமையான துப்பாக்கி சூடு ஈடுபட்டதால் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் பலத்த காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அந்த பாரை சுற்றி வளைத்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

4982 total views