அமெரிக்காவில் திருமணத்தன்று புதுமண தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்!

Report

அமெரிக்காவில் திருமணத்தன்று ஹெலிகொப்டரில் பயணம் மேற்கொண்ட புதுமண தம்பதி விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் உறவினர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் நகரைச் சேர்ந்த வில் பைலர் இவர் விவசாய பொறியியல் படித்து வந்ததார்.

மேலும், இதுகுறித்து தெரிவிக்கையில், இவருக்கும், விவசாய தொலை தொடர்பு படித்து வந்த பைலி ஆக்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு இருவரும் ஒரு ஹெலிகொப்டரில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் அது நடுவானில் பறந்துகொண்டு இருந்தபோது இயந்திர கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

மேலும் இதில் பயணம் செய்த புதுமண தம்பதிகள் இருவரும் இச்சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் இருவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குறித்த ஹெலிகொப்டரை இயக்கிய விமானி லாரன்ஸ் வியட்நாம் போரில் கலந்து கொண்ட மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்வும், விபத்துக்கு முன்னர் உதவிக்கு அவர் அழைப்பு விடுத்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1020 total views