கலிபோர்னியாவில் 12 பேரை சூட்டுக் கொன்றவரின் விவரம் வெளியானது!

Report

கலிபோர்னியாவில் கேளிக்கைவிடுதி ஒன்றில் நேற்றையதினம் துப்பாக்கிசூடு நடத்தி 12பேரைக் கொன்றவரின் விவரம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், முன்னாள் கடற்படைச் சிப்பாயான 29 வயது டேவிட் ஈயன் லோங் என்பவரே இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மனநலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாமென கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டை நடத்தியதன் பின்னர் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும் இவரது சடலம் கேளிக்கை விடுதியினுள் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவரது தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2587 total views