ஹாலிவுட் பிரபல நகைச்சுவை நடிகர் 10-வது குழந்தைக்கு தந்தையானார்!

Report

ஹாலிவுட்டில் கலக்கிய பிரபல நகைச்சுவை நடிகர் எட்டி மர்பி தனது 10-வது குழந்தைக்கு தந்தை ஆனார்.

பிரபலஹாலிவுட் நகைச்சுவை நடிகர் எட்டி மர்பி தற்போது தன் ஐந்தாவது மனைவியுடன் 57 வயதில் 10 குழந்தை பெற்று கொண்டுள்ளார்.

இந்திய கலாச்சாரத்தில் இருப்பது போல் இல்லாமல் அமெரிக்காவில் திருமணம்-விவாகரத்து சர்வ சாதாரணமான ஒன்று.

அதன்படி, எட்டி மர்பி என்பவருக்கு தனது முன்னாள் காதலிகள் பவுலெட் மேக்நீலி, டாமரா ஹூட் ஆகியோரின் மூலம் எரிக் (29), கிறிஸ்டியன் (28) என 2 மகன்களும், பெல்லா ஜாஹ்ரா (16), ஜோலா இவி (18), ஷேனே ஆத்ரா (23), பிரையா (28) என 4 மகள்களும் உள்ளனர்.

முன்னாள் மனைவி நிக்கோல் மிட்செல் மர்பி மூலமாக மைல்ஸ் மிட்செல் (25) என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

மேலும், மெலானி என்ற பெண்ணின் மூலமாக ஏஞ்சல் ஐரிஸ் மர்பி பிரவுன் (11) என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில், தற்போது 2012-ம் ஆண்டு முதல் காதலித்து வந்த Paige Butcherவுடன் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்பமாக உள்ளார். இது எட்டி மர்பிக்கு 10வது குழந்தை.

இந்தக் குழந்தை ஆண் குழந்தை. குழந்தைக்கு மேக்ஸ் சார்லஸ் என பெயரிட்டுள்ளனர். இதன்மூலம் எட்டி மர்பி 10 குழந்தைகளின் தந்தை ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8128 total views