அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு இன்று இறுதிக்கிரியை!

Report

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷுன் இறுதிக்கிரியை இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டப்ள்யூ. புஷ் தனது 94ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.

அன்றுமுதல் அவரது பூதவுடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வந்ததோடு, தலைநகர் வொஷிங்டனில் நேற்று அரச இறுதிஅஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா,உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அன்னாரின் பூதவுடல் இன்று காலை முதல் புனித மார்டின் எபிஸ்கோபஸ் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.அதனை முன்னிட்டு நாடெங்கும் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு, அரச விடுமுறையும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் அவரது குடும்பத்தார் மற்றும் அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இறுதிக்கிரியை இடம்பெறவுள்ளதோடு, அவரது மனைவியான பார்பரா புஷ்ஷின் கல்லறையறுகே பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

12934 total views