ஜப்பானில் விபத்துக்குள்ளான இரண்டு அமெரிக்க விமானங்கள்; 6 வீரர்கள் மாயம்!

Report

இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்கள் ஜப்பானில் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் மாயமாகினர்.

குறித்த விபத்தானது, ஜப்பான் கடற்கரையில் சுமார் 200 மைல் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு நடைபெற்றதாக ஜப்பானில் உள்ள அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில்,இரண்டு அமெரிக்க போர் விமானங்களான எப்-18 ஃபைட்டர், சி -130 டேங்கர் ஆகிய இரண்டும் ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்ட போது அரங்கேறியுள்ளது.

குறித்த விபத்து குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தெற்கு ஜப்பானின் ல்வாகுனி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானங்கள் விபத்துக்குள்ளாகின.

சம்பவத்தில், சி -130 போர் விமானம் 5 பேருடனும், எப்-18 விமானம் இரண்டு பேருடனும் சென்றது. இதில், ஒரு விமானி மட்டும் மீட்கப்பட்டுள்ளார்.

ஏனைய 6 பேரின் நிலைமை குறித்து தகவல் எதுவும் இல்லை. அவர்களை மீட்கும் பணியில், ஜப்பான் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவது நெருங்கிய பாதுகாப்பு கூட்டாளியாக திகழும் ஜப்பான் - அமெரிக்கா இடையே சில கசப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது .

1586 total views