முட்டைகோஸ் வாங்கிய பெண்ணுக்கு அடித்தது ஜாக்பார்ட் !

Report

அமெரிக்காவில் முட்டைகோஸ் வாங்கிய பெண்ணிற்கு 1½ கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அமெரிக்காவை சேர்ந்த வனேசா வார்ட் என்ற பெண் ஒருவர் தனது தந்தையுடன் சேர்ந்து முட்டைகோஸ் வாங்குவதற்கு சூப்பர் மார்க்கெட் சென்றுள்ளார்.

அங்கு காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிய அந்த பெண்ணிற்கு முட்டைகோஸில் கூப்பன் ஒன்று இருந்துள்ளது.

அந்த கூப்பனை வைத்து அந்த பெண் ஒரு வீல் கேமை விளையாடியுள்ளார். இந்த விளையாட்டின் முடிவில் அந்த பெண் ரூ. 1½ கோடிக்கு அதிபதியானார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து அந்த பெண் கருத்து தெரிவிக்கும் போது, இந்த பணத்தை வைத்து தான் டிஸ்னி லேண்ட் செல்லவிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

9286 total views