வெனிசுலாவில் நாடாளுமன்ற சபாநாயகர் கைது: அமெரிக்கா கண்டனம்!

Report

வெனிசுலாவில் நாடாளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ என்பவர், கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறித்த, நாடாளுமன்ற சபாநாயகரான ஜூவான் கெய்டோ, தலைநகர் கராக்கசில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, பாதுகாப்புபடை வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இது எதிர்க்கட்சிகளை, அச்சுறுத்தும் செயல் எனக் கூறி அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும், அவர்கள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.

956 total views