ட்ரம்ப் முழு உடல் நலத்துடன் உள்ளார் - வெள்ளை மாளிகை மருத்துவர் தகவல்!

Report

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முழு உடல் நலனுடன் இருப்பதாக வெள்ளை மாளிகையின் மருத்துவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 2017-ல் அதிபராகப் பொறுப்பேற்ற ட்ரம்ப்புக்கு, நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த 4-மணி நேரப் மருத்துவப் பரிசோதனையின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான இரண்டாவது முறையாக மருத்துவப் பரிசோதனை ட்ரம்ப்புக்கு நடத்தப்பட்டது.

வெள்ளை மாளிகை மருத்துவக் குழுவின் இயக்குநரும் ட்ரம்ப்பின் மருத்துவருமான சியான் பி கான்லி தலைமையில் 11 பேர் கொண்ட குழு இந்தப் பரிசோதனையை மேற்கொண்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், மருத்துவப் பரிசோதனை முடிவுகளின்படி அதிபர் ட்ரம்ப் முழு உடல் நலத்துடன் உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

72 வயதான ட்ரம்ப் புகை மற்றும் மதுவகைகளை உட்கொள்வதில்லை. ஆனால், நவீன வாழ்க்கை முறையை விரும்புவர் ஆவார். மேலும், துரித உணவுகளின் மீது அலாதியான பிரியம் கொண்ட ட்ரம்ப் பர்கர், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், பீட்சா ஆகியவற்றை விரும்பி உண்பார்.

முன்னதாக, கடந்த ஆண்டு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ட்ரம்ப்புக்கு நல்ல ஜீன்கள் இருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1045 total views