இறக்கும் குழந்தையை பெற்றெடுத்து உறுப்பு தானம் செய்த தாய்!

Report

அமெரிக்க தம்பதி,டேவிஸ் லோவட் – கிறிஸ்டா டேவிஸ் ஆகியோரின் குழந்தை 18 வாரங்கள் ஆகியிருந்த நிலையில், குறைபாடுகளுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும், கடந்த வருடம் டிசம்பர் 25-ஆம் தேதி குறித்த தம்பதியினர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளனர்.

அதன்படி, குறித்த குழந்தை பிறக்கும்போதே மிகவும் அரிதான சில பாகங்கள் மூளையில் இல்லாமல் பிறந்துள்ளது.

இதனால் மருத்துவர்கள் பெற்றோரிடம், குழந்தை 30 நிமிடத்திற்கு மேல் உயிருடன் இருக்காது என தெரிவித்துள்ளனர்.

இதனால் இருவரும் கடும் அதிர்ச்சியடைந்த போதும், அனைவரையும் ஆச்சரிப்பபடுத்தும் வகையில் மருத்துவர்களின் முயற்சியால் பெற்றோரின் அரவணைப்பில் ஒரு வாரம் வரை உயிருடன் இருந்தது.

இதையடுத்து மருத்துவரின் அறிவுரையின் படி, உயிரிழந்த குழந்தையின் இதயவால்வுகள் இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டன.

சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டன. இருப்பினும், இது குறித்து தம்பதியினர் ஆறுதல் அடைந்தனர்.

8523 total views