அமெரிக்க கல்வித் துறையில் லஞ்ச ஊழலில் சிக்கிய 50 ஹாலிவுட் நடிகைகள் மீது வழக்கு!

Report

அமெரிக்க கல்வித்துறையில் லஞ்ச ஊழல் தொடர்பாக, ஹாலிவுட் நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஹாலிவுட் நடிகைகள் லோரி லவுக்ளின், பெலிசிட்டி ஹாப்மேன் ஆகிய 2 நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் டெக்சாஸ், தெற்கு கரோலினா, யாலே, ஸ்டான்போர்டு, ஜார்ஜ் டவுன் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான லஞ்ச ஊழல் புகார்கள் தலை விரித்தாடுகின்றன.

இந்த பல்கலைக்கழங்களில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஹாலிவுட் நடிகைகள் உள்பட பல முக்கிய பிரபலங்கள் கோடிக்கணக்கிலான ரூபாயை லஞ்சமாக கொடுத்தது மத்திய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலி சான்றிதழ்கள், பொய்யான மதிப்பெண்கள், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் நுழைவுத் தேர்வு எழுதுதல் போன்ற வழிகளில் மோசடிகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து, குறித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1020 total views