அமெரிக்காவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை! நியூஸிலாந்து பிரதமர்

Report

அமெரிக்கா ஏன் இன்னும் கடுமையான துப்பாக்கிச் சட்டத்தை அமல்படுத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆடர்ன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த போது ஜெசிண்டா ஆடர்ன் கூறுகையில், உலகின் மிகப்பெரிய இணையதளங்கள் ஆன்லைனில் ஆயுதங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

நியூஸிலாந்தில் துப்பாக்கி வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது. ஆனால், அதற்காக நீங்க ராணுவத் துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

ஆஸ்திரேலியா மிகப்பெரிய படுகொலைக்குப் பிறகு தனது சட்டத்தை மாற்றியது. நியூஸிலாந்து மசூதி தாக்குதலுக்குப் பிறகு மாற்றியுள்ளது.

ஆனால், ஏன் அமெரிக்கா கடுமையான துப்பாக்கிச் சட்டத்தை அமல்படுத்தவில்லை என்று தெரியவில்லை என்றார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 50 பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள்.

இதனைத் தொடர்ந்து, துப்பாக்கி விதிகளைக் கட்டுப்படுத்தி புதிய மாற்றங்களை நியூஸிலாந்து ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1445 total views