அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு 5 ஆண்டு சிறை!

Report

அமெரிக்காவில் டெலிமார்க்கெட்டிங் மோசடிக்கு உடந்தையாக இருந்த இந்திய மாணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு நீதித்துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

இந்திய கல்லூரி மாணவர் பிஸ்வாஜீத் குமார் ஜா (21). டெலிமார்க்கெட்டிங் மூலம் மோசடி திட்டங்களை செயல்படுத்தி வந்த நிறுவனத்துக்கு ஜா தொழில்நுட்ப அடிப்படையில் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்த நிறுவனம், 58 வயது முதல் 93 வயது வரையிலுள்ள முதியோர்களை குறிவைத்து, 10 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) வரையிலான சேமிப்பை அந்நிறுவனம் சுருட்டியது.

இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் மோசடிக்கு உடந்தையாக இருந்த ஜாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2750 total views