அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு ஹண்ட் மற்றும் ஜோன்சன் கண்டனம்!

Report

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கக் கொங்கிரஸின் பெண் உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கு கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவப் போட்டியாளர்களான பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரமி ஹண்ட் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட ருவிற்றர் பதிவுகளில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க கொங்கிரஸின் பெண் உறுப்பினர்கள் மிக மோசமான அரசாங்கங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் தத்தமது சொந்த நாட்டுக்கே திருப்பி போகவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அமரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கு பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, ஸ்கொட்டிஷ் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் விவாதமொன்றில் கலந்துகொண்ட தலைமைத்துவப் போட்டியாளர்கள் இருவரும் ட்ரம்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள போதிலும் இக்கருத்து இனவெறி மிக்கது என்பதைக் கண்டிக்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

பன்முக கலாசார சமுதாயம் ஒன்றின் தலைவராக இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி இத்தகைய மொழியை பயன்படுத்துவது தவறு எனவும் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் பிரதமர் மே-யுடன் உடன்படுவதாகவும் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனும் பிரதமர் மே-யின் கருத்துடன் உடன்படுவதாகவும் பிரித்தானியாவில் இத்தகைய சம்பவம் ஒருபோதும் நடக்காது எனவும் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.

1061 total views