அமெரிக்காவில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட காதலருக்காக காத்திருக்கும் நினா!

Report

அமெரிக்காவில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, சிறு வயதில் தான் சந்தித்த நண்பனை காதலித்து திருமணம் செய்து கொண்ட 29 வயது இளம் பெண் ஒருவர் தன் கணவர் வீடு வரும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றார்.

நினா ஹோஃப்லெர் எனும் பீனிக்ஸைச் சேர்ந்த இளம் பெண், தனது 16-வது வயதில் மைக்கேல் என்பவரை சந்தித்தார்.

அவர்களின் சந்திப்பு நடந்த சில வாரங்களிலேயே 17 வயதாக இருந்த மைக்கேல் ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் கைதாகினார்.

இந்நிலையில் அவர் சிறை செல்லும் முன், தான் கடிதம் எழுதுவதாக நினா உறுதியளித்தார்.

அதேபோல் கடிதம் எழுதி வந்த நிலையில், மைக்கேலுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் கடிதப் போக்குவரத்தின் மூலம் அவர்களின் நட்பு காதலாக மாற 2012-ல் மைக்கேலை சிறையில் சந்தித்தபோது இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது.

மைக்கேலின் தண்டனை காலம் முடிய 13 ஆண்டுகள் இருக்கும் நிலையில், சமூகத்தை பொருட்படுத்தாது தனது காதலன் மைக்கேலை கரம் பிடித்தார் நினா.

2017-ல் அவர்களின் திருமணம் நடந்தது. இருவருக்கும் சிறை வளாகத்திலேயே 48 மணி நேரத்தை ஒன்றாக செலவிட அனைத்து வசதிகளும் கொண்ட வீடு சட்டப்படி வழங்கப்பட்டது.

2014ம் ஆண்டு கலிபோர்னிய சட்டப்படி 15 ஆண்டுகளை சிறையில் கழித்த இளம் கைதிக்கு 90 நாட்கள் பரோல் வழங்கப்படும் என்பதால் அதற்காக இன்னும் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருப்பதாக நினா வேதனையுடன் தெரிவித்தார்.

இருப்பினும் தன் கணவர் முழு விடுதலை பெற்று, சுதந்திரமாக புன்னகையோடு தன் வீட்டு வாசலின் கதவைத் திறந்து வரும் காட்சி மனதில் நிழலாடுவதாகவும், அதுவரை தன் அவருக்காக காத்திருப்பதாகவும் நினா நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார் .

858 total views