28 சீன நிறுவனங்களை தடை செய்த அமெரிக்கா

Report

சீனாவில் வீகர் இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுவரும் நிலையில், அமெரிக்கா 28 சீன அமைப்புகளைத் தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

குறித்த நிறுவனங்களால் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நிறுவனங்கள் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா வணிக துறையின் தரவு ஒன்று கூறுகிறது.

எனினும் அமெரிக்காவில் இந்தத் தடை குறித்து சீனா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இதேவேளை மேற்கு சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில், விசாரணையின்றி லட்சக்கணக்கான முஸ்லிம்களை அடைத்து வைத்திருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1023 total views