அமெரிக்காவில் வீட்டின் மீது மோதிய விமானம் - விமானிக்கு நேர்ந்த கதி

Report

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ளது அப்லேண்ட் நகரின் கேபிள் விமான நிலையத்திலிருந்து இன்று காலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது மோதியதில் விமானி உயிரிழந்துள்ளார்.

எனினும் அந்த வீட்டில் இருந்த தந்தையும் மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

இந்த நிலையில் விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ‘விமானம் மிக அருகில் பறப்பது போன்று சத்தம் கேட்டதையடுத்து வெளியேசென்று பார்க்கையில் விமானம் மிகவும் தாழ்வாக பறந்து வந்து கொண்டிருந்தது.

அத்துடன் அது யு-டர்ன் எடுத்து பறந்த போது வீட்டின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கிய நிலையில் வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்ததாக கூறியுள்ளார்.

மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான குறித்த விமானம், இருவர் அல்லது மூவர் பயணிக்ககூடிய ஒற்றை எஞ்சின் உடைய சிர்ரஸ் எஸ்.ஆர்- 22 வகையைச் சேர்ந்தது எனவும் தெரிவிக்கபடுகின்றது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.

2071 total views