அமெரிக்க விழாவில் சர்சையை கிளப்பிய சிலி நாட்டு பாப் பாடகி!

Report

அமெரிக்காவில் நடந்த விழாவில் அரை நிர்வாணமாக பாப் பாடகி ஒருவர் விருது பெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் மெட்ரோ ரெயில் கட்டணத்தை அரசு உயர்த்தியதை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் சாண்டியாகோ உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். மக்களின் தொடர் போராட்டத்துக்கு அடி பணிந்த அரசு மெட்ரோ ரெயில் கட்டண உயர்வை ரத்து செய்தது.

ஆனாலும், நாட்டில் நீண்ட காலமாக நடந்து வரும் கொலை, பாலியல் வன்முறை மற்றும் ராணுவத்தினரின் சித்ரவதை ஆகியவற்றை களைய அரசியலமைப்பை மாற்றியமைத்து, சமூக சீர்திருத்தங்களை கொண்டு வர கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற லத்தீன் கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் சிலி நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகி மோன் லாபர்டே (வயது 36) சிலி அரசை கண்டிக்கும் விதமாக அரை நிர்வாணத்தில் வந்து தனக்கான விருதை வாங்கி கவனம் ஈர்த்தார்.

மோன் லாபர்டே மேலாடை அணியாமல் தனது மார்பகத்தின் மேலே சிலியில் சித்ரவதை, கற்பழிப்பு மற்றும் கொலை செய்கிறார்கள் என கருப்பு நிற மையில் எழுதியிருந்தார். குறித்த, விழாவில் அவருக்கு சிறந்த மாற்று ஆல்பத்துக்கான விருது வழங்கப்பட்டது.

211 total views