அமெரிக்காவில் போதைப்பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது!

Report

அமெரிக்காவில் பல்கலைக்கழக ஆய்வகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 வேதியியல் துறை பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அர்காடெல்ஃபியா ஹெண்டர்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியர்களாக பணியாற்றும் டெர்ரி டேவிட் பேட்மேன், பிராட்லி ஆலன் ரோலண்ட் ஆகிய இருவரும் ஆய்வகத்தில் மெத்தம்ஃபெட்டமைன் என்ற போதைப்பொருளை தயாரித்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் அறிவியல் மையத்தில் ரசாயன நெடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, விசாரணையில் இவர்கள் இருவரும் போதைப்பொருள் தயாரித்தது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெத்தம்ஃபெட்டமைன் போதைப்பொருள் தயாரித்தால் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்க சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

236 total views