வீட்டில் இருந்தவர்கள் மீது மர்ம நபர் அதி பயங்கர துப்பாக்கிச்சூடு! 4 பேர் பலி

Report

அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கலிபோர்னியாவின் ப்ரெஷ்னோ நகரில், வீட்டின் பின்புறத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கால்பந்தாட்ட போட்டியை பெரிய திரையில் பார்த்து கொண்டிருந்தனர்.

இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 4 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் 25 முதல் 35 வயது வரையிலான ஆசிய கண்டத்தை சேர்ந்த ஆண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இறந்த நால்வரில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், ஒருவர் மருத்துவமனையில் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் தாக்குதல் நடத்திய மர்மநபரை தேடும் பணி, தீவிரமாக நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

423 total views