டிரம்ப்க்கு திடீர் முழு உடல் பரிசோதனை.....வெள்ளை மாளிகை முக்கிய தகவல்!

Report

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிராம் மீண்டும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மேரிலேண்டில் உள்ள இராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி டிராம் முழு உடல் பரிசோதனை நடந்தது.

இந்த பரிசோதனை 2 மணி நேரம் நடைபெற்றது. எந்தவித திட்டமும் இல்லாமல் முழு உடல் பரிசோதனை செய்த தகவல் வேகமாக பரவியது.

இது குறித்து வெள்ளை மாளிகை ஜனாதிபதி டிராம் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். இது வழக்கமான பரிசோதனை தான் தேர்தலுக்காக பல இடங்களுக்கு செல்ல இருப்பதால் முன் கூட்டியே உடல் பரிசோதனை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

3084 total views