அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!

Report

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வால்மார்ட் ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. ஒக்லஹோமா மாநிலத்தில் டன்கன் நகரில் செயல்பட்டு வந்த வால்மார்ட் மாலில் நேற்று வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென உள்ளே நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி சுட ஆரம்பித்துள்ளார். இந்த திடீர் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கியால் சுட்டவர் என சந்தேகிக்கப்படும் நபரும் உயிரிழந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்ஸாஸ் மாகாணத்தின் எல்பாசோ நகரில் உள்ள வால்மாா்ட் ஷாப்பிங் மாலில் ஒருவா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 22 போ் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

383 total views