அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம் - விமானி உட்பட 9 பேர் பலி!

Report

அமெரிக்காவின் சவுத் டகோடாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 சிறார்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

சாம்பர்லின் முனிசிபல் விமான நிலையத்திலிருந்து 12 பேருடன் புறப்பட்ட Pilatus PC-12 என்ற சிறிய ரக விமானம், புறப்பட சில நிமிடங்களில் சாம்பர்லின் பகுதியில் இருந்த பாறைகளில் மோதி வெடித்து சிதறியது.

இந்த விபத்தில், விமானி மற்றும் 2 சிறார்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், படுகாயம் அடைந்த 3 பேரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சவுத் டகோடாவில் கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் விமான விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

671 total views