அமெரிக்காவில் பனிப்புயலுக்கு அஞ்சி பனி கரடி செய்த வேலை!

Report

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயலினால் பாதிக்கப்பட்ட கரடி ஒன்று நகருக்குள் நுழைந்துள்ளது.

பின்னர் குளிர்ந்தாங்க முடியாமையினால் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறியுள்ளது.

மிகவும் லாவகமாக காரின் கதவை தனது கைகளால் திறந்து அந்தக் கரடி உள்ளே சென்றுள்ளது.

எனினும், கரடியால் மீண்டும் காரைவிட்டு வெளியே வரத் தெரியவில்லை. இதைக் கண்ட அந்தக் காரின் உரிமையாளர் மெதுவாக வந்து காரின் மற்றொரு பக்கக் கதவைத் திறந்துவைத்துவிட்டு ஓடிவிட்டார். சில விநாடிகளில் கரடி தப்பித்தோம் எனக் கதவைத் திறந்துகொண்டு துள்ளிக்குதித்து ஓடியது.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

3666 total views