21 வயதுக்கு உட்பட்டவர்கள் தொலைபேசி பயன்படுத்தினால் ஓராண்டு சிறை!

Report

21 வயதுக்கு உட்பட்டவர்கள் கையடக் தொலைபேசியை (செல்போனை) சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என அமெரிக்க செனட் சபையில் பிரேரணையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவரே இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

அதில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன் செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போதிய முதிர்ச்சி கிடையாது என்றும், செல்போன் மூலம் அவர்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் அபராதமாக விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த மசோதா நிறைவேறும் என தம் எதிர்பார்க்கவில்லை என்றும் ,அதனை ஒரு விழிப்புணர்வுக்காகவே தாம் சமர்ப்பித்ததாகவும் செனட் உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் தெரிவித்துள்ளார்.

4171 total views